பங்களாதேஷ் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் பிரதமர் நரேந்திர மோடியிடம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) முதல்முறையாக பேசினார்.
அவர்களின் கலந்துரையாடலின் போது, ஜனநாயக, நிலையான, அமைதியான மற்றும் முற்போக்கான பங்களாதேஷிற்கு இந்தியாவின் ஆதரவை பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தினார்.
பங்களாதேஷில் உள்ள இந்துக்கள் மற்றும் அனைத்து சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்கும் முகமது யூனுஸ் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் உறுதியளித்தார்.
பங்களாதேஷில் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக சமீபத்திய அறிக்கைகளைத் தொடர்ந்து அவர் இந்த உத்தரவாதத்தை கொடுத்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி முன்பு கவலை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.