10ஆவது சீன – தெற்காசிய கண்காட்சி ஜூன் 11ஆம் நாள் யுன்னான் மாநிலத்தின் தலைநகர் குன்மிங்கில் துவங்கியது.
இவ்வாண்டுக்கான கண்காட்சி, சேவை வர்த்தகம், பசுமை எரிசக்தி, பண்பாட்டுச் சுற்றுலா, ஸ்மார்ட் உற்பத்தி, நவீன வேளாண்மை, எல்லைத் தாண்டிய வர்த்தகம் உள்ளிட்ட 13 கருப்பொருட்களில் ஜுன் 16ஆம் நாள் வரை நடைபெறுகிறது.
இதில், சேவை வர்த்தகம் என்ற கருப்பொருள் கொண்ட தனி அரங்கு, முதல்முறையாக அமைக்கப்பட்டது. மேலும், மனித உருவ ரோபோக்கள், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புத்தாக்கத் தொழில்நுட்பங்களும், தயாரிப்புகளும் நடப்பு கண்காட்சியில் அறிமுகம் செய்யப்படுகின்றன. சீனாவுக்கும் தெற்காசிய நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த கண்காட்சி 2013ஆம் ஆண்டு முதல் நடைபெற்றது.
2025ஆம் ஆண்டில் சீனாவுக்கும் தெற்காசிய நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மதிப்பு முந்தையை ஆண்டை விட 10.7 சதவீதம் அதிகரித்து, மொத்தம் 20ஆயிரம் கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியது. இவ்வாண்டின் முதல் 4 மாதங்களில், இரு தரப்பு வர்த்தக மதிப்பு, 15.8 சதவீதம் அதிகரித்துள்ளது என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
