சீனாவின் பொருளாதாரப் பணி பற்றிய கூட்டம்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு ஜூலை 30ஆம் நாள் நடத்திய கூட்டத்துக்கு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங் தலைமைத் தாங்கினார். இவ்வாண்டின் அக்டோபர் திங்களில், 20வது மத்திய கமிட்டியின் 4வது முழு அமர்வு பெய்ஜிங்கில் நடத்தப்படுவதாக இக்கூட்டத்தில் திட்டமிட்டப்பட்டுள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு, மத்திய கமிட்டியிடம் பணியறிக்கை வழங்கி, தேசிய பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்கான 15வது ஐந்தாண்டுத் திட்டத்தின் உருவாக்கம் பற்றி ஆய்வு செய்வது, இந்த முழு அமர்வின் முக்கிய அம்சமாகும்.

தற்போது சீனப் பொருளாதாரம் இடர்ப்பாடுகள் மற்றும் சவால்களை எதிர்நோக்கி வருகிறது. நிலைமையைச் சரியாகக் கணித்து, வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் உள்ளார்ந்த ஆற்றலைப் பயன்படுத்தி, பொருளாதார மீட்சி போக்கினை வலுப்படுத்த வேண்டும் என்று இன்றைய கூட்டத்தில் சுட்டிக்காடப்பட்டுள்ளது.

மேலும், இவ்வாண்டின் பிற்பாதியிலுள்ள பொருளாதாரப் பணிகள் இக்கூட்டத்தில் ஏற்பாடு செய்யப்படுள்ளதோடு, சீர்திருத்தத்தை உறுதியுடன் ஆழமாக்கி, உயர்நிலை திறப்புப் பணியை விரிவாக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author