வெனிசூலாவுக்கு சீனாவின் முதலாவது தொகுதி மனித நேய உதவிப் பொருட்கள் ஜூலை 6ஆம் நாள் அந்நாட்டின் தலைநகர் கராகஸைச் சென்றடைந்துள்ளன.
உதவிப் பொருட்களை ஒப்படைக்கும் நாளில் வெனிசூலா வெளியுறவு அமைச்சர் கில் விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். நிலநடுக்கம் ஏற்பட்ட பின், வெனிசூலாவிலுள்ள சீனர்களும் சீன முதலீட்டு நிறுவனங்களும் மீட்புதவிப் பணியில் ஆக்கப்பூர்வமாக ஈடுபட்டுள்ளனர். நிறைய காட்சிகள் மிகவும் மனமுருகச் செய்துள்ளன என்று அவர் கூறினார்.
வெனிசூலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 6ஆம் நாள் வரை, 3342பேர் உயிரிழந்தனர். 16ஆயிரத்து 740பேர் காயமடைந்தனர்.
