சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நவம்பர் 14ம் நாள் மாலை பெரு நாட்டின் அரசுத் தலைவர் டீனா பொலுஆர்டெ அம்மையாருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இப்பேச்சுவார்த்தையின் போது, அழைப்பை ஏற்று பெருவில் அரசு முறை பயணம் மேற்கொண்டு, ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற உச்சிமாநாட்டில் பங்கெடுப்பதில் மகிழ்ச்சி அடைவதாக ஷிச்சின்பிங் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், இரு நாடுகளின் தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 53 ஆண்டுகளில், இரு தரப்புறவு சீராக வளர்ந்து வருகிறது. கூட்டு முயற்சியுடன், சீன-பெரு இரு தரப்பின் வர்த்தகத் தொகை 1.6 மடங்கு அதிகரித்திருப்பது, இரு நாட்டு மக்களுக்கு உண்மையான நலன்களைத் தந்துள்ளது. சீனா, பெரு நாட்டுடனான பாரம்பரிய நட்புக்கு மதிப்பளித்து, இரு தரப்பின் பரந்த ஒத்துழைப்பு எதிர்காலம் மீது நம்பிக்கை கொண்டுள்ளது. இந்நிலையில், இரு நாட்டு மக்களுக்கு மேலதிக நன்மை பயக்கும் வகையில், பெருவுடன் இணைந்து முயற்சி மேற்கொண்டு, சீன-பெரு பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவை, புதிய கட்டத்தில் காலடி எடுத்து வைப்பதை முன்னெடுக்க சீனா விரும்புவதாகவும் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.