கேரள மாநிலம் வயநாடு கல்லாடி சுரங்கப்பாதை கட்டுமானப் பணியிடத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 5 பேர் காயமடைந்துள்ளனர்.
வயநாடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (KSDMA) தகவல்படி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இப்பகுதியில் 265 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக, கல்லாடி சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், விடாது பெய்த மழையினால் கட்டுமானப் பணியிடத்தில் இருந்த மண் மற்றும் பாறை இடிபாடுகள் திடீரென சரிந்து கீழே விழுந்துள்ளன. இந்த இடியும் இடிபாடுகளில் சிக்கி அங்கிருந்த 5 பேர் காயமடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள உள்ளூர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக இந்த நிலச்சரிவு விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனப் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. நிலச்சரிவு காரணமாக அப்பகுதியில் தற்காலிகமாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஒருவர் மீட்கப்பட்ட நிலையில், மண்ணுக்குள் யாரேனும் புதைந்துள்ளார்களா என தேடும் பணி தீவிரம்..
A landslide at the Kalladi tunnel work site in #Wayanad blocked the road and injured 5 people. They have been taken to the hospital. No deaths have been reported. Work at the site had already been stopped because of heavy rain. The area received 265 mm of rain in the last 24… pic.twitter.com/3LrpPhR0gM
— Ashish (@KP_Aashish) July 7, 2026
