தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அனைவரும் இந்தப் பண்டிகையை பாதுகாப்பாகவும், பொறுப்புடனும், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலும் கொண்டாடுமாறு அவர் வலியுறுத்தினார்.
ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 19) வெளியிட்ட தனது அதிகாரப்பூர்வச் செய்தியில், தீபாவளி இந்தியாவின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்று என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார்.
மேலும், இது இருளை வென்று ஒளி, அறியாமையை வென்று அறிவு, தீமையை வென்று நன்மை ஆகியவற்றின் நித்திய வெற்றியைக் குறிக்கிறது என்றும் அவர் எடுத்துரைத்தார்.
இந்தத் திருவிழா தேசம் முழுவதும் பரஸ்பர பாசம் மற்றும் சகோதரத்துவத்தின் முக்கியச் செய்தியை அளிக்கிறது என்றும், செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியை பக்தர்கள் வழிபடும் நாள் என்றும் தெரிவித்தார்.
பாதுகாப்புடன் தீபாவளியைக் கொண்டாட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வலியுறுத்தல்
