சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, 29ஆம் நாள், பிரேசில் பிரிக்ஸ் ஒத்துழைப்பு அமைப்பின் அதிகாரப்பூர்வமான உறுப்பு நாடுகள் மற்றும் கூட்டாளி நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில், பல தரப்புவாதத்தை வலுப்படுத்துவது குறித்து கருத்துக்களைத் தெரிவித்தார்.
உலகில் பிரச்சினைகளைத் தீர்க்கும் போக்கில், பல தரப்புவாதத்தைப் பேணிக்காத்து நடைமுறைப்படுத்த வேண்டும். கூட்டு ஆலோசனை, கூட்டுக் கட்டுமானம், கூட்டுப் பகிர்வு எனும் கண்ணோட்டத்தைத் தொடர்ந்து பின்பற்றி, சர்வதேச உறவுக்கான அடிப்படை கோட்பாட்களைப் பேணிக்காத்து, பல தரப்புவாத வர்த்தக அமைப்புமுறைக்கு உத்தரவாதம் செய்து, மேலும் நியாயமான, நேர்மையான உலக மேலாண்மை அமைப்புமுறையைக் கட்டியமைக்க வேண்டும் என்று வாங்யீ தெரிவித்தார்.