சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிப்ரவரி 24ம் நாள் அழைப்பை ஏற்று, ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புத்தினுடன் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டார்.
ஷிச்சின்பிங் அப்போது கூறுகையில், இடம்பெயராத அண்டை நாடுகளான சீனாவும் ரஷியாவும், ஒன்றுக்கொன்று ஆதரவளித்து, கூட்டு வளர்ச்சி பெறும் உண்மையான நண்பர்களாகும்.
சீன-ரஷிய உறவுக்கு, வலுவான உள் உந்து சக்தி மற்றும் தனிச்சிறப்பான நெடுநோக்கு மதிப்பு உண்டு. அது, 3வது தரப்புக்கு எதிராக அமையாது. எந்த ஒரு 3வது தரப்பினாலும் பாதிக்கப்படாது. சர்வதேச அரங்கில் எவ்வளவு மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும், சீன-ரஷிய உறவு நிலையாக முன்னேறி, ஒன்றுக்கொன்று வளர்ச்சிக்குப் புத்துயிரையும், சர்வதேச உறவுக்கு நிலைப்புத் தன்மை மற்றும் ஆக்கப்பூர்வ ஆற்றலையும் ஊட்டும் என்று தெரிவித்தார்.
ரஷிய-அமெரிக்க தொடர்பின் புதிய நிலைமை பற்றியும், உக்ரைன் நெருக்கடியில் ரஷியாவின் நிலைப்பாடு பற்றியும் புத்தின் அறிமுகப்படுத்தினார். ரஷியா உள்ளிட்ட பல்வேறு தரப்புகள், இந்நெருக்கடிக்குத் தீர்வு காண மேற்கொண்ட முயற்சிக்கு ஷிச்சின்பிங் வரவேற்பு தெரிவித்தார்.