திருச்சியில் இருந்து தாய்லாந்து நாட்டின் பாங்காக்கிற்கு தாய் ஏர்வேஸ் மற்றும் ஏர் ஏசியா நிறுவனங்கள் விமான சேவையை தொடங்கியுள்ளன.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கும் ஏற்கனவே விமான சேவை இயக்கப்பட்டு வந்தன.
சமீபத்தில் புதிய விமான முனையம் திருச்சியில் திறக்கப்பட்ட பிறகு, இங்கிருந்து வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனக் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், சனிக்கிழமை (செப்டம்பர் 21) திருச்சியில் இருந்து பாங்காக்கிற்கு நேரடி விமான சேவை தொடங்கி வைக்கப்பட்டது.
இங்கிருந்து பாங்காக்கிற்கு செவ்வாய், வியாழன் மற்றும் சனி என வாரத்திற்கு மூன்று நாட்கள் இயக்கப்பட உள்ளது.
திருச்சியிலிருந்து பாங்காக்கிற்கு நேரடி விமான சேவை தொடக்கம்
