“சுதா கொங்கராவின் மனு தள்ளுபடி” – ‘இதயம் முரளி’ பட விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!! 

Estimated read time 1 min read

டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் ‘இதயம் முரளி’ திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரி, பிரபல இயக்குனர் சுதா கொங்கரா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். தனக்கு பேசப்பட்ட சம்பள பாக்கியை முழுமையாகத் தராமல் படத்தை வெளியிட டான் பிக்சர்ஸ் நிறுவனம் முயல்வதாகவும், அதனால் பட ரிலீசுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இயக்குனர் சுதா கொங்கராவின் மனுவைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்தச் சம்பளப் பிரச்சினை தொடர்பாக நீதிமன்றத்தில் முட்டிக்கொள்வதை விடுத்து, இரு தரப்பும் மத்தியஸ்தர் (Mediator) ஒருவரை நியமித்து அவர் மூலமாகப் பேசிப் பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவால் ‘இதயம் முரளி’ பட ரிலீஸ் சிக்கல் தற்காலிகமாக நீங்கியுள்ளது.

You May Also Like

More From Author