சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், மே 14ஆம் நாள் முற்பகல், பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில், சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில்,
தற்போது, ஒரு நூற்றாண்டில் காணாத மாற்றங்கள் உலகளவில் ஏற்பட்டு வருகின்றன. துசைடிடெஸ் வலையில் சிக்கிக்கொள்வதை தவிர்த்து பெரிய நாட்டு உறவுக்கான புதிய முன்மாதிரியை சீனாவும் அமெரிக்கவும் உருவாக்க முடியுமா? இரு தரப்பும் உலகத்திற்கு மேலதிகமான நிதானத் தன்மையை அளிக்க முடியுமா? இரு தரப்புறவுக்கான அருமையான எதிர்காலத்தை இரு நாடுகளும் கூட்டாக படைக்க முடியுமா? இத்தகைய யுகத்தின் வினாக்களுக்குப் பெரிய நாடுகளின் தலைவர்கள் கூட்டாக பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
ஷிச்சின்பிங் மேலும் கூறுகையில், டிராம்புடன் சீன-அமெரிக்க உறவுக்கு கூட்டாக வழிக்காட்ட வேண்டும் என விரும்புகிறேன். 2026ஆம் ஆண்டு, இரு நாட்டுறவு லட்சியத்தை முன்னெடுத்துச் செல்லும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக மாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
வர்த்தக போரால் யாருக்கும் வெற்றி பெறுவதற்குச் சாத்தியமில்லை. கூட்டு வெற்றி என்பதே சீன-அமெரிக்கப் பொருளாதார வர்த்தக உறவுகளின் சாராம்சமாகும். சர்ச்சைக்கள் மற்றும் மோதலை எதிர்நோக்கும் போது, சமத்துவமான முறையில் கலந்தாய்வு செய்வது என்பது ஒரே ஒரு சரியான தெரிவாகும் என்றார்.
அவர் தைவான் பிரச்சினை பற்றி குறிப்பிட்ட போது,
சீன மற்றும் அமெரிக்க உறவில் மிக முக்கியமான இடம் வகிக்கிறது என்று வலியுறுத்தினார். அதோடு, இப்பிரச்சினையைச் சீராக கையாண்டால், இரு நாட்டுறவு ஒட்டுமொத்த அளவில் நிதானமாகவும் சீராகவும் அமையும். இல்லா விட்டால், இரு நாட்டுறவு சர்ச்சை அல்லது மோதலை எதிர்நோக்கும். தைவான் நீரிணை இரு கரையின் அமைதிக்காக தைவான் சுதந்திரத்தை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது. தைவான் நீரிணை இரு கரையின் அமைதி மற்றும் நிதானத்தைப் பேணிக்காப்பது என்பது சீன-அமெரிக்க உறவைத் தீர்மானிக்கிறது என்றார்.
