நாளை கரூர் செல்கிறார் முதல்வர் – கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்!

Estimated read time 0 min read

கரூர் மாவட்டத்தில் நாளை நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் முதலமைச்சர் ஜோசப் விஜய், புதிய தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

முதலமைச்சரான பிறகு முதன்முறையாக கரூர் செல்லும் ஜோசப் விஜய், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி, அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்துகிறார்.

பின்னர், மனவாசி ஊராட்சியில் ஆயிரத்து 700 கோடி ரூபாய் முதலீட்டில் அமையவுள்ள, 13 ஆயிரத்து 500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் தோல் அல்லாத காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

தொடர்ந்து, வெண்ணெய்மலையில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று, கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையிலான அரசு பணி நியமன ஆணைகளையும் வழங்குகிறார்.

You May Also Like

More From Author