கடந்த வாரம் நடந்த விபத்திற்குப் பிறகு, அகமதாபாத்திலிருந்து லண்டனுக்குச் செல்லும் முதல் விமானத்தை இயக்க திட்டமிடப்பட்டிருந்த ஏர் இந்தியா விமானம் (AI-159), தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்துவிட்டது.
கடந்த 24 மணி நேரத்தில் ஏர் இந்தியா விமானம் சம்பந்தப்பட்ட மூன்றாவது தொழில்நுட்ப கோளாறு இதுவாகும்.
லண்டனுக்குச் செல்லும் விமானம் இன்று மதியம் 1.10 மணிக்குப் புறப்பட திட்டமிடப்பட்டிருந்தது.
தற்போது விமானம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து பயணிகளுக்குக் கட்டணம் திரும்ப வழங்கப்படும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் அகமதாபாத்தில் ஒரு குடியிருப்பு பகுதியில் மோதி 274 பேரைக் கொன்ற மோசமான சம்பவத்திற்குப் பிறகு, ஏர் இந்தியாவின் AI-171 ரக விமானத்திற்கு ஓய்வு தரப்பட்டு, அது AI-159 உடன் மாற்றப்பட்டது.
விபத்துக்குள்ளான அதே பாதையில் இன்று பயணப்படவிருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து
