இந்தியா மற்றும் கனடா ஆகிய நாடுகள், தங்களுக்கு இடையேயான பதட்டமான உறவுகளைச் சீரமைப்பதற்கான லட்சியமான புதிய செயல் திட்டத்தை வகுத்துள்ளன.
கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோரைச் சந்தித்ததைத் தொடர்ந்து, ராஜதந்திர ரீதியாகப் பாதிக்கப்பட்ட இருதரப்பு உறவுகளைச் சீராக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த காலிஸ்தான் பிரிவினைவாதி ஒருவரின் கொலையைச் சுற்றியிருந்த சர்ச்சையால் உறவுகளில் விரிசல் ஏற்பட்டது.
முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, 2023 இல் இந்திய உளவுத்த்துறைக்கு இந்தக் கொலையில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டியதை அடுத்து, கனடாவில் இருந்து இந்தியாவுக்கு வருகை தரும் முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் ஆவார்.
பிரதமர் நரேந்திர மோடியுடன் கனடா அமைச்சர் அனிதா ஆனந்த் சந்திப்பு
