இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை மற்றும் அனைத்து மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, இந்தியத் தேர்தல் ஆணையம், தனது விளக்கத்தை அளித்துள்ளது.
இத்திட்டம் தொடர்பான நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் தலைவர், பிடிஐ-க்கு அளித்த பேட்டியில் இதுகுறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
நாடாளுமன்றக் குழுவிடம் தேர்தல் ஆணையம் சமர்ப்பித்துள்ள முதற்கட்ட அறிக்கையின்படி, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த தங்களுக்கு 6 மாத கால முன்கூட்டிய அறிவிப்பு தேவை என்று தெரிவித்துள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல்: 6 மாத கால அவகாசம் கோரிய தேர்தல் ஆணையம்
