யுன்னான் மாநிலத்தில் உலக மேயர் உரையாடல் தொடக்கம்

2026 உலக மேயர் உரையாடல் ஜூலை 14ஆம் நாள் முதல் 16ஆம் நாள் வரை, யுன்னான் மாநிலத்தின் சிச்சுவான்பான்னா தை இனத் தன்னாட்சி சோவில் நடைபெற்றது.

இதில், சீனா, பாகிஸ்தான், நேபாளம், இலங்கை முதலிய 24 நாடுகளிலிருந்து 100க்கும் மேலான மேயர்கள், பிரதிநிதிகள், நிபுணர்கள், அறிஞர்கள் முதலியோர் கலந்துகொண்டனர். உயிரின பாதுகாப்பு, நகர ஆட்சிமுறை, தொழில் துறையின் கூட்டுக் கட்டுமானம் உள்ளிட்டவை குறித்து அவர்கள் விவாதித்து கருத்துகளைப் பரிமாறிகொண்டனர்.

மியன்மாரின் மன்டலே நகரின் மேயர் சின் மாங் அய் கூறுகையில், சிச்சுவான்பான்னா நகரில் உள்ளூர் வெப்பமண்டல மழைக்காட்டுப் பாதுகாப்பு அமைப்பானது பண்பாட்டுச் சுற்றுலா துறையுடன் இணைந்து செயல்படும் வளர்ச்சிக்கான ஆக்கப்பூர்வ நடைமுறையாக்கத்தை பார்த்து அறிந்துகொண்டேன் என்றார்.

இலங்கையின் தெகிவளை-கல்கிசையின் மேயர் கீரபனாங் டோன் பராகும் சாந்தா கூறுகையில்,

மனித குலம் இயற்கையுடன் இணைந்து வளர்ச்சிக்கு அளிக்கும் முக்கியத்துவம் இந்நடவடிக்கையின் மூலம் வெளிக்காட்டப்பட்டுள்ளது என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author