10 ஆண்டுகளுக்கு முன், கூறப்படும் தென் சீனக் கடல் நடுவர் தீர்ப்பு ஆணை வெளியிடப்பட்டது. தற்போது, இதற்கு தொடர்பில்லாத நாடான ஜப்பான், சீனாவின் சட்டப்பூர்வ கருத்துகளைக் குற்றச்சாட்ட முன்வைந்தது. அது, அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 14 நாடுகளுடன் கூறப்படும் “கூட்டறிக்கை”யை வழங்கி, தென் சீன கடலில் சீனாவின் வரலாற்று உரிமையை மறுத்துள்ளது. இந்த அசிங்கமான செயல், தென் சீன கடல் பிரச்சினையில் தலையிட்டு, பிரதேச அமைதியைச் சீர்குலைக்கும் ஜப்பானின் தீய நோக்கங்களை வெளிப்படுத்தியுள்ளது. ஜப்பானுக்கு சீனா கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. ஜப்பானின் ஆத்திரமூட்டல் செயல்களுக்கு சீனா தக்க பதிலடி கொடுத்து, சொந்த உரிமைப் பிரதேச இறையாண்மையையும், கடல் உரிமையையும் உறுதியாகப் பேணிக்காக்கும்.
கடந்த 10 ஆண்டுகளாக, ஜப்பான் சட்டவிரோத இருந்த்த் “தீர்ப்பு ஆணை”க்கு இடைவிடாமல் ஆதரவளித்து, சீனா மீது அழுத்தத்தைப் பிரயோகித்து, சீனாவை களங்கம் ஏற்படுத்த முயன்று வருகிறது. தென் சீன கடல் பிரச்சினையைப் பயன்படுத்தி, சீனாவைக் கட்டுப்படுத்தி, ஆசிய பசிபிக் கடலில் மேலாதிக்கத்தை மீண்டும் கைப்பற்றுவது அதன் நோக்கமாகும்.
ஜப்பானிய ஹோசி பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியர் ஒருவர் கூறுகையில், கூறப்படும் “இந்தோ பசிபிக் நெடுநோக்கிற்காகவே”, ஜப்பான் சட்டவிரோத “தீர்ப்பு ஆணை”யை சாயம் பூசி வருகின்றது. ஆனால், இது ஜப்பான் ஒரு சார்பாக பகைமையை ஏற்படுத்தி, பிரதேச நிதானத்தைச் சீர்குலைக்கும் சாக்குப்போக்காக மாற்ற வேண்டாம் என்று சுட்டிக்காட்டினார்.
தென் சீன கடலில் சீனாவின் உரிமைப் பிரதேச இறையாண்மை மற்றும் கடல் உரிமைகளுக்கு, போதுமான வரலாறு மற்றும் சட்ட ரீதியான ஆதாரங்கள் உண்டு. இது எப்படியிருந்தாலும் சட்டவிரோதமான “தீர்ப்பு ஆணை”யால் பாதிக்கப்படாது. தென் சீன கடல் அமைதி மற்றும் நிதானத்தைச் சீர்குலைப்பதை ஜப்பான் உடனடியாக நிறுத்த வேண்டும்.
