உலகச் செயற்கை நுண்ணறிவு ஒத்துழைப்பு அமைப்பின் உருவாக்கம் பற்றிய ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் நிகழ்வு

Estimated read time 1 min read

உலகச் செயற்கை நுண்ணறிவு ஒத்துழைப்பு அமைப்பின் உருவாக்கம் பற்றிய ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் நிகழ்வு ஜூலை 16ஆம் நாள் ஷாங்காய் மாநகரில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ இந்நிகழ்வில் பங்கெடுத்து, சீன அரசின் சார்பில் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார். ஐ.நா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்ரேஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

உலகச் செயற்கை நுண்ணறிவு ஒத்துழைப்பு அமைப்பு, அரசுகளுக்கிடையிலான சுதந்திரமான சர்வதேச அமைப்பாகும். இது, ஐ.நா. சாசனத்தின் கோட்பாட்டைப் பின்பற்றி, விரிவான ஆலோசனை, கூட்டுப் பங்களிப்பு, பயன்களின் பகிர்வு ஆகிய கருத்துகளில் ஊன்றி நிற்கிறது. மேலும், செயற்கை நுண்ணறிவு பற்றிய சர்வதேச ஒத்துழைப்பையும் உலகளாவிய ஆட்சிமுறையையும் முன்னேற்றுவது, இவ்வமைப்பின் நோக்கமாகும். இவ்வமைப்பின் தலைமையகம் ஷாங்காயில் அமைந்துள்ளது என்று இந்த ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Please follow and like us:

You May Also Like

More From Author