ஆந்திர பிரதேசத்தின் கர்நூல் மாவட்டத்தில் ஏற்பட்ட பேருந்து தீ விபத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததுள்ளனர்.
இந்தச் சம்பவம் வியாழக்கிழமை இரவு ஹைதராபாத்-பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள சின்ன தெக்கூர் கிராமம் அருகே நடந்தது.
சாலையில் பயணித்து கொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்தது.
தீ மிக வேகமாக பரவியதால், பலர் தப்பிக்க முடியாமல் உயிரிழந்தனர் என ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.
எஞ்சின் கோளாறு, ஷார்ட் சர்க்யூட் அல்லது எரிபொருள் கசிவு போன்ற காரணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என கூறப்படுகிறது.
பேருந்தில் சுமார் 40 பயணிகள் இருந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களில் 18 பயணிகள் உயிருடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என இந்தியா டுடே செய்தி தெரிவிக்கிறது.
ஹைதராபாத்-பெங்களூரு நெடுஞ்சாலையில் பேருந்து தீப்பிடித்து 20 பேர் பலி
