தவெக மதுரை மாநாடு தேதி திடீர் மாற்ற‌ம்

Estimated read time 1 min read

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டுக்கான புதிய தேதியை விஜய் நாளை அறிவிக்கவுள்ளார்.

1

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது. 2-வது மாநாட்டை மதுரையில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 25-ம் தேதி நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே பாரபத்தி பகுதியில் மாநாட்டுக்கான பூமி பூஜை கடந்த 16-ம்தேதி நடந்தது. கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் நிர்வாகிகள் சேர்ந்து மூகூர்த்தகால் நட்டனர். இதனை தொடர்ந்து, மாநாட்டிற்கு அனுமதி கோரி மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அர்விந்தை சந்தித்து மனு அளித்தனர். ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதிக்குள் மாநாடு நடத்துவதற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் ஆகஸ்ட் 27-ம் தேதி விநாயகர் சதுர்த்தி வர இருப்பதால் மாநாடு தேதியை மாற்ற காவல்துறை கோரிக்கை விடுத்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டுக்கான புதிய தேதியை விஜய் நாளை அறிவிப்பார் என பொதுச்செயலாளர் ஆனந்த் கூறியுள்ளார்.

You May Also Like

More From Author