சீனாவின் ஏற்பாட்டில், ஹாங்காங்கைச் சேர்ந்த 3 பேர் மற்றும் தைவானைச் சேர்ந்த ஒருவர் உள்பட 215 சீனர்கள் கப்பல் மற்றும் விமானம் மூலம், 2 முறையாக லெபனானிலிருந்து பாதுகாப்பாக வெளியேறினர் என்று சீன வெளியுறவு அமைச்சகம் அக்டோபர் 8ஆம் நாள் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டது.
லெபனானின் நிலைமை மோசமாகி வருவதுடன், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் முக்கிய உத்தரவைச் செயல்படுத்தும் விதம், போக்குவரத்து அமைச்சகம், பயணியர் விமானப் பணியகம், லெபனான், சைப்ரஸ் உள்ளிட்ட நாடுகளுக்கான சீனத் தூதரகங்கள் ஆகியவற்றுடன், சீன வெளியுறவு அமைச்சகம் நெருக்கமாக ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, சீன மக்களின் பாதுகாப்பைப் பேணிக்காப்பதற்கான முயற்சிகளைச் செய்து, அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை உடனடியாக மேற்கொன்டது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ்நிங் அம்மையார் தெரிவித்தார்.