உலகச் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் சீனா முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்: ஷிச்சின்பிங்

Estimated read time 0 min read

2026ஆம் ஆண்டு உலகச் செயற்கை நுண்ணறிவு மாநாடு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆட்சிமுறை பற்றிய உலகளாவிய உயர்நிலைக் கூட்டம் ஜூலை 17ஆம் நாள் முற்பகல், ஷாங்காய் மாநகரில் துவங்கியது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் இம்மாநாட்டின் துவக்க விழாவில் பங்கெடுத்து உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் கூறுகையில், பல்வேறு தரப்புகளின் முயற்சிகளுடன், உலகச் செயற்கை நுண்ணறிவு ஒத்துழைப்பு அமைப்பு ஷாங்காய் மாநகரில் நிறுவப்பட்டுள்ளது. உலகின் தெற்குலக நாடுகளின் அழைப்பின் பேரில், சீனா, சர்வதேசச் சமூகத்துடன் ஒன்றுபட்டு, செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியையும் மேலாண்மையையும் மேம்படுத்த மேற்கொண்ட முக்கிய நடவடிக்கைகளில் இது ஒன்றாகும். இது, செயற்கை நுண்ணறிவு வளரச்சி வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகத் திகழும் என்றார்.

உலகளவில் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சிக்கு மேலும் ஆதரவளித்து, உலகின் செயற்கை நுண்ணறிவு ஆற்றல் கட்டுமானத்தை சீனா தொடர்ந்து விரைவுபடுத்தும். அடுத்த 5 ஆண்டுகாலத்தில், வளரும் நாடுகளைச் சேர்ந்த 5000 பேருக்கு செயற்கை நுண்ணறிவு தொடர்பான சிறப்பு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி வாய்ப்புகளைச் சீனா வழங்கும். ஆசியான், அரபு நாடுகள் லீக், ஆப்பிரிக்க ஒன்றியம், இலத்தீன் அமெரிக்க – கரீபியன் நாடுகள் சமூகம், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, பிரிக்ஸ் அமைப்பு முதலியவற்றின் நாடுகளில் சர்வதேசச் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு மற்றும் ஒத்துழைப்பு மையங்களை சீனா நிறுவும். தொடர்புடைய நாடுகளின் மக்களின் பாதுகாப்பை உத்தரவாதம் செய்யும் வகையில், மாசு எனும் காலநிலை தொடர்பான சீனாவின் நுண்மதி நுட்ப முன்னெச்சரிக்கை திட்டம், 30 நாடுகளில் அறிமுகப்படுத்தப்படும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

You May Also Like

More From Author