உள்ளூர் நேரப்படி மே 8ஆம் நாள் முற்பகல் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பெல்கிரேட் நகரில் செர்பிய அரசுத் தலைவர் அலெக்ஸாண்டர் வூசிச்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஷிச்சின்பிங் கூறுகையில், நீங்கள் நெடுநோக்கு பார்வை மற்றும் வரலாற்றுப் பொறுப்புணர்வு கொண்ட தலைசிறந்த அரசியல்வாதியாக இருக்கின்றீர்கள். தங்கள் தலைமையில், செர்பிய அரசியல் நிலைமை நிதானமாக இருக்கிறது.
பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. மக்களின் வாழ்க்கை தரம் மேம்பட்டு வருகிறது. ஒட்டுமொத்த தேசிய ஆற்றல் மற்றும் சர்வதேச தகுநிலை தெள்ளத்தெளிவாக உயர்ந்து வருகிறது. செர்பியாவின் உண்மையான நண்பராக மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என்று தெரிவித்தார்.
ஷிச்சின்பிங் மேலும் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளில், உங்களுடன் பல முறை சந்தித்துள்ளேன். இரு நாட்டுறவின் நெடுநோக்கு தன்மை மற்றும் பன்முகத் தன்மை பிரச்சினைகள் பற்றி தொடர்பு கொண்டு கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டுள்ளோம். இரு நாட்டுறவு பாய்ச்சல் வளர்ச்சியடைவதற்கும்,வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனைகளைப் பெறுவதற்கும் கூட்டாக வழிகாட்டி வருகிறோம் என்றும் தெரிவித்தார்.
புதிய வரலாற்று துவக்கப் புள்ளியில், சீன-செர்பிய உறவின் மேலும் அருமையான எதிர்காலம் காணப்படுகிறது. செர்பியாவுடன் இணைந்து, இரு நாடுகளின் அடிப்படை நலன் மற்றும் தொலைநோக்கு நலனைக் கூட்டாக பேணிக்காத்து, தத்தமது நாட்டின் வளர்ச்சி மற்றும் தேசத்தின் மறுமலர்ச்சியை நாடி, புதிய காலத்தில் சீன-செர்பிய பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்கத்தை கையோடு கைகோர்த்து முன்னேற்றி, மனித குல பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்கத்தை முன்னேற்றுவதற்கு மேலதிக பங்காற்ற சீனா விரும்புவதாவும் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.