ஷிச்சின்பிங் எழுதிய சீனாவின் ஆட்சிமுறை எனும் நூலுக்கான 5ஆவது தொகுதியின் ஆங்கில மொழி பதிப்பு தொடர்பான பரவல் நடவடிக்கை 3ஆம் நாள், ஜோன்னெஸ்பேர்க்கில் நடைபெற்றது.
தென்னாப்பிரிக்காவின் ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரஸ் கட்சியின் 2ஆவது துணைச் செயலாளரும், அரசு மாளிகையின் வரைவு, கண்காணிப்பு மற்றும் மதப்பீட்டு துறை அமைச்சருமான மரோபேன் ராம்கோபா இதில் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினார். அப்போது அவர் கூறுகையில்,
சீனத் தனிச் சிறப்பு வாய்ந்த நவீனமயமாக்கம், வறுமையை ஒழிப்பது, அறிவியல் தொழில் நுட்பத்தின் புத்தாக்கம், உலகின் வளர்ச்சி ஒத்துழைப்பு போன்ற துறைகள் தொடர்பான முக்கிய கருத்துக்கள் இந்நூலில் தொகுதியாக விளக்கிக்கூறப்பட்டுள்ளன. உலகின் தெற்குலக நாடுகள் இதில் உள்ள அனுபவங்களைப் பயன்படுத்தலாம் என்றார்.
