சேவை வர்த்தகத்துக்கான 2025ஆம் ஆண்டு சீனச் சர்வதேசப் பொருட்காட்சியைச் சேர்ந்த சேவை வர்த்தக வளர்ச்சிக் கருத்தரங்கு செப்டம்பர் 11ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது.
2024ஆம் ஆண்டு சீனச் சேவை வர்த்தக வளர்ச்சி அறிக்கை இந்தக் கருத்தரங்கில் வெளியிடப்பட்டது.
சிக்கலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சூழ்நிலையில், உயர்நிலை வெளிநாட்டுத் திறப்புப் பணியைச் சீனா தொடர்ந்து முன்னேற்றி வருகிறது.
இதனால், 2024ஆம் ஆண்டு சீனாவின் சேவை வர்த்தக அளவு உச்ச நிலையை எட்டியுள்ளது. அன்னிய வர்த்தகத்தின் அளவை நிதானப்படுத்தி, கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், பொருளாதார மீட்சிக்கு உதவுவதற்கும் இது ஆக்கப்பூர்வமான பங்காற்றியுள்ளது என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2024ஆம் ஆண்டு, சீனாவின் சேவை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி அளவு முதன்முறையாக 1 லட்சம் கோடி அமெரிக்க டாலரைத் தாண்டி, உலகளவில் 2வது இடத்தினைப் பிடித்துள்ளது.
இதில் சுற்றுலா உள்ளிட்ட பாரம்பரிய சேவை வர்த்தகம் சாதனைகளைப் பெற்றுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.