சீனாவின் பல்வேறு தொழில் நிறுவனங்கள், 2025ம் ஆண்டில் மொத்தமாக 41 கோடியே 50 இலட்சம் டன் எடையுள்ள தானியங்களைக் கொள்வனவு செய்துள்ளன. தானிய கொள்வனவு அளவு, கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து 40 கோடி டன்னுக்கு மேல் உள்ளது என்று சீனத் தேசிய உணவு மற்றும் உத்திநோக்குக் கையிருப்புப் பணியகத்தின் பணி கூட்டம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து இப்பணியகத்தின் தலைவர் லியு ஹுவேன் ஷின் கூறுகையில், 15வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில், தானியங்களின் கொள்வனவு, விற்பனை மற்றும் கையிருப்புக்கான மேலாண்மையை, தேசிய உணவு மற்றும் உத்திநோக்குக் கையிருப்புப் பணியகம் தொடர்ந்து வலுப்படுத்தும். விவசாயிகளின் தானியங்கள் விற்கப்படும் என்ற கோட்டைப் பேணிக்காத்து, தானிய விலைவாசியை நியாயமான நிலையில் இருப்பதை சீனா உறுதி செய்யும் என்று தெரிவித்தார்.
படம்:VCG
