உலகிற்கு மேலதிக வாய்ப்புகளை உருவாக்கும் சீனாவின் இரு கூட்டத்தொடர்கள்

Estimated read time 0 min read

வெளிநாட்டு ஊடகங்கள் சீனாவின் இரு கூட்டத்தொடர்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி, புத்தாக்கம், திறப்பு விரிவாக்கம் முதலிய துறைகளில் சீனாவின் நடவடிக்கைகளை நேர்மறையாக மதிப்பிடுகின்றன.

இவ்வாண்டின் இரு கூட்டத்தொடர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கான திசையை வழிகாட்டும் என்றும், உயர் தொழில்நுட்பம் மற்றும் புதுமை படைக்கும் ஆற்றால் இயக்கப்படும் உயர்தர வளர்ச்சி என்ற நிலைக்கு சீனா மாறுவதற்கு, அடுத்த ஐந்து ஆண்டுகள் முக்கிய காலக்கட்டமாக இருக்கும் என்றும், கஜகஸ்தான் தேசிய செய்தி நிறுவனம் வெளியிட்ட கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய சந்தையின் திறப்பு மூலம் கென்யா தயாரிப்புத் துறையின் வளர்ச்சியை எப்படி ஊக்குவிப்பது: சீனாவின் இரு கூட்டத்தொடர்கள் என்ற தலைப்பில் கென்யா தேசிய ஒலிபரப்பு நிறுவனம் தனது இணைய தளத்தில் கட்டுரை ஒன்றை வெளியிட்டது.

தென்னாப்பிரிக்காவின் பிரிக்ஸ் தொலைக்காட்சியின் ஆப்பிரிக்கா சேனல், சீனாவின் இரு கூட்டத்தொடர்களின் முக்கிய நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்பியது. உலகளாவிய தெற்கு நாடுகளுடனான சீனாவின் ஒத்துழைப்பின் வளர்ச்சி வாய்ப்புகளை பார்வையாளர்கள் ஆழமாகப் புரிந்துகொள்ள இது உதவுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author