இந்தியாவில் வசந்த விழா விருந்தை நடத்திய சீனத் தூதரகம்

Estimated read time 1 min read

இந்தியாவுக்கான சீனத் தூதரகம் பிப்ரவரி 3ம் நாள் புதுதில்லியில் வசந்த விழா விருந்தை நடத்தியது.

இந்திய அரசு, அரசியல் கட்சிகள், இதர நாட்டுத் தூதரகங்கள், வணிகத் துறை, சீன நிறுவனங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த பிரதிநிதிகளும், சீன மாணவர்களும் உட்பட சுமார் 600 பேர் இவ்விருந்தில் கலந்து கொண்டனர். இந்தியாவுக்கான சீனத் தூதர் ஷுயு ஃபேய் ஹொங் உரையில் விருந்தினர்களுக்கு வசந்த விழா வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்தியாவுடன் இணைந்து கலாச்சாரப் பரிமாற்றத்தை வலுப்படுத்தி, மேலதிக நட்பார்ந்த தொடர்பு பாலங்களை அமைக்க சீனா விரும்புகிறது என்றும் தெரிவித்தார்.

இந்தியாவின் சிந்தனை கிடங்கின் ஆஷ் நரேன் ரொய் என்ற அறிஞர், சீன ஊடகக் குழுமத்துக்குப் பேட்டியளிக்கையில், வசந்த விழா கலை நிகழ்ச்சி மற்றும் பல்வகை கொண்டாட்டங்கள் மூலம் உலகிற்கு வசந்த விழா பண்பாட்டை சீனா காண்பித்து, பரந்த மறுமொழியைப் பெற்றுள்ளது. அது, நாகரிகப் பரிமாற்றத்தின் புதிய இணைப்பாகத் திகழ்கிறது என்று தெரிவித்தார்.

 

You May Also Like

More From Author