தமிழ்நாட்டின் 2026-27ஆம் நிதியாண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி புதன்கிழமை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 181(1)-இன் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கும் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முழு சட்டப்பேரவை நிகழ்வுகளும் பொதுமக்களுக்காக நேரலை செய்யப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஆகஸ்ட் 5, காலை 10:00 மணிக்கு தமிழ்நாடு திருத்திய பொது பட்ஜெட் 2026-27 தாக்கல் செய்யப்படும், தொடர்ந்து மறுநாள், ஆகஸ்ட் 6, காலை 10:00 மணிக்கு தமிழ்நாடு வேளாண் தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
தமிழ்நாடு பட்ஜெட் 2026-27: ஆகஸ்ட் 5-ல் சட்டப்பேரவையில் தாக்கல்!
