நாடு திரும்பிய ராமேஸ்வரம் மீனவர்கள் – மத்திய அரசுக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

Estimated read time 1 min read

ராமேஸ்வரம் மீனவர்கள் 25 பேர் நாடு திரும்ப உதவிய பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நன்றி தெரவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், கடந்த பிப்ரவரி மாதம் 23-ம் தேதி, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 25 மீனவர்களை இலங்கை அரசிடமிருந்து விடுவித்து அவர்களை விமானம் மூலமாக இந்தியாவிற்கு அழைத்து வந்த நமது மத்திய அரசின் சீரிய முயற்சிகளை மனதார வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களை மூன்று மாதங்களில் மீட்டு அழைத்து வர அனைத்து ஏற்பாடுகளையும் துரிதப்படுத்திய பாரதப் பிரதமர் மோடிக்கும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக பாஜக சார்பாகவும் தமிழக மீனவர்கள் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக நயினார் நகேந்திரன் கூறியுள்ளார்.

You May Also Like

More From Author