சீன மனித வள மற்றும் சமூக காப்புறுதி அமைச்சகம் வெளியிட்ட புதிய தரவுகளின்படி, இவ்வாண்டின் முற்பாதியில், நகரங்களில் புதிதாக அதிகரிக்கப்பட்ட வேலை வாய்ப்புக்களின் எண்ணிக்கை 69 இலட்சத்து 50 ஆயிரமாக இருந்ததோடு, வேலையற்றோர் விகிதம் 5.2 விழுக்காடு இருந்தது. இக்காலக்கட்டத்தின் போது வேலை வாய்ப்பு நிலைமை ஒட்டுமொத்த அளவில் நிதானமாக உள்ளது.
நாடளவில் முதுமைக் கால அடிப்படை சமூக காற்புறுதி, வேலையின்மைக் காப்புறுதி, வேலையின் போது காயமுற்றதற்கு காப்புறுதி ஆகிவற்றில் சேர்க்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை முறையே 107 கோடியே 60 இலட்சமாகவும், 24 கோடியே 90 இலட்சமாகவு, 32 கோடியே 30 இலட்சமாகவும் உள்ளது. இவ்வாண்டின் முதல் 6 திங்கள்காலத்தில், இம்மூன்று சமூக காப்புறுதிகளின் ஒட்டுமொத்த நிதி நிதானமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
