தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்துள்ள நிலையில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வரும் ஜூலை 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்தப் பயணத்தின் போது, கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தல் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, அவர்களுக்கு அரசு வேலைக்கான ஆணைகளை வழங்க முதல்வர் திட்டமிட்டுள்ளார்.
கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த், முதல்வரின் கரூர் பயண விவரத்தை வெளியிட்டார்.
வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை இலக்காகக் கொண்டு கரூரில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
கரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல்வர் விஜய்
