ச்சுபோஷூ என்ற பட்டுத் துணியில் எழுதப்பட்ட சீன பண்டைய ஆவணம், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட போரிடும் நாடுகள் காலத்தைச் (கி.மு.475-கி.மு.221) சேர்ந்த ஒரே பட்டு ஆவணம் ஆகும். இது சுமார் 2300 ஆண்டுகள் பழமையானது.
ச்சுபோஷூ பட்டு ஆவணம் 1942ஆம் ஆண்டில் திருடப்பட்டு, 1946ஆம் ஆண்டில் அமெரிக்கர்களால் ஏமாற்றப்பட்டு சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டது. இதுவரை, அது அமெரிக்காவில் கிட்டத்தட்ட 80 ஆண்டுகளாக உள்ளது.
கடந்த 40 ஆண்டுகளில் ஆராய்ச்சி மூலம், தற்போது அமெரிக்க தேசிய ஆசிய கலை அருங்காட்சியகத்தில் சேமிக்கப்பட்டுள்ள பட்டு ஆவணம் ச்சுபோஷூ பட்டு ஆவணம் தான் என்பதை சீனா நிரூபித்துள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில், சர்வதேச சட்ட அமலாக்கத் துறைகளின் ஒத்துழைப்பு, தனியார் நன்கொடை மற்றும் நீதித்துறை கோரிக்கை முயற்சிகள் மூலம், சீனா பல இழந்த தொல்பொருட்களை வெளிநாடுகளிலிருந்து வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளது. 2009ஆம் ஆண்டு முதல், அமெரிக்கா 20 தொகுதிகளாக 594 தொல்பொருட்களை சீனாவிற்குத் திருப்பி அனுப்பியுள்ளது. சீனாவைச் சேர்ந்த ச்சுபோஷூ பட்டு ஆவணத்தை அமெரிக்கா விரைவில் திருப்பி அனுப்புவது அவசியம்.