சீனச் சட்டக் கழகத்தின் 9ஆவது தேசிய உறுப்பினர் மற்றும் பிரதிநிதிகளின் மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு, சீன அரசு தலைவர் ஷிச்சின்பிங் கடிதம் அனுப்பினார்.
இக்கடிதத்தில் ஷிச்சின்பிங் கூறுகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது தேசிய மாநாட்டுக்குப் பிறகு பல்வேறு நிலை சட்டக்கழகங்கள் சட்டத்தின் ஆட்சியை முன்னேற்றுவதில் ஆக்கப்பூர்வமாக பங்காற்றியுள்ளது.
புதிய காலம் மற்றும் புதிய பயணத்தில், அனைத்து நிலை சட்டக் கழகங்கள், புதிய காலத்தில் சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சோஷலிசச் சிந்தனையின் வழிகாட்டலுடன், சீனப் பாணி நவீனமயமாக்கத்தை முன்னேற்றப் பாடுபட வேண்டும் என்று வலியுறுத்தினார்.