சீனத் தேசிய புள்ளிவிவரப் பணியகம் 27ஆம் நாள் வெளியிட்ட தரவின்படி, இவ்வாண்டின் முதல் காலாண்டில் சீனாவின் ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு மேல் வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் லாபத் தொகை கடந்த ஆண்டின் 3.3விழுக்காடு சரிவிலிருந்து மீட்சியடைந்து 0.8விழுக்காடு அதிகரித்துள்ளது.
அவற்றில் தயாரிப்புத் தொழிலின் லாபத் தொகை கடந்த ஆண்டை விட, 7.6விழுக்காடு அதிகரித்துள்ளது. ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு மேல் வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் லாபத் தொகை அதிகரிப்புக்கான முக்கிய ஆதாரமாக இது திகழ்கிறது.