நேபாளத்துக்கான சீனாவின் 5ஆவது தொகுதி பேரிடர்கால மீட்புதவிப் பொருட்கள் 11ஆம் நாள் பிற்பகல் நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டை சென்றடைந்தன.
நேபாளத்துக்கான சீனத் தூதர் சாங் மாவ்மிங், நேபாள அறிவியல் தொழில் நுட்ப மற்றும் புத்தாக்க அமைச்சர் மஹபிர் பன் ஆகியோர், மீட்புதவிப் பொருட்களை ஒப்படைக்கும் விழாவில் கலந்து கொண்டனர்.
இந்தத் தொகுப்பில் டீசல் மின்னாக்கிகள், மருத்துவத்துக்கான முகக்கவசங்கள், டிஎன்ஏ சோதனை சாதனங்கள் உள்ளிட்ட நேபாளத்துக்கு உடனடியாகத் தேவைப்படும் பொருட்கள் இடம்பெற்றுள்ளன. இவை, மீட்புப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வதற்கு நேபாளத்துக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
