இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), 2026 ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க கோடைகாலப் இன்டர்ன்ஷிப் பயிற்சித் திட்டத்திற்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
ரிசர்வ் வங்கியின் பொருளாதாரம், நிதி, ஒழுங்குமுறை மற்றும் கொள்கை ஆராய்ச்சிச் சூழலில் நேரடியாக அனுபவத்தைப் பெற இந்தத் திட்டம் அரிய வாய்ப்பை வழங்குகிறது.
விண்ணப்பிக்கக் கடைசி நாள் டிசம்பர் 15 ஆகும். தேர்வு செய்யப்படுபவர்கள் 2026 ஆம் ஆண்டின் ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் அதிகபட்சமாக மூன்று மாதங்கள் வரை இந்தப் பயிற்சி நடைபெறும்.
திட்டத்தின் தேவைகள் மற்றும் துறைசார்ந்த அடிப்படையில் காலம் மாறுபடலாம்.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தின் அடிப்படையில் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டு நேர்காணல்கள் ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் நடைபெறும், இறுதியான தேர்வு மார்ச் மாதத்திற்குள் அறிவிக்கப்படும்.
கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ.20,000 உதவித்தொகை; ஆர்பிஐ சம்மர் இன்டர்ன்ஷிப்புக்கு உடனே விண்ணப்பிங்க
