மகிந்த ராஜபக்சே ஆளுங்கட்சியின் தலைவராக மீண்டும் தேர்வு

இலங்கையில் ஆளுங்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியின் மாநாடு தலைநகர் கொழும்புவில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே கட்சியின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அதை தொடர்ந்து அவர் மாநாட்டில் பேசுகையில், “பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியதாக நாங்கள் நியாயமற்ற முறையில் குற்றம் சாட்டப்படுகிறோம். விடுதலைப்புலிகளுடன் போரில் ஈடுபட்டாலும் தொடர்ந்து வளர்ச்சியை உறுதி செய்தோம்” என கூறினார். 2005 முதல் 2015 வரை இலங்கை அதிபராக மகிந்த ராஜபக்சே பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

 

Please follow and like us:

You May Also Like

More From Author