சீனத் தேசிய அந்நிய செலாவணிப் பணியகம் 2026ஆம் ஆண்டின் பிற்பாதிக்கான சீன அந்நிய செலாவணி நிர்வாகப் பணி பற்றிய கூட்டத்தை அண்மையில் நடத்தியது. இதில் எல்லை கடந்த வர்த்தகத்தில் அந்நிய செலாவணி வரவு செலவின் வசதியளிக்கும் கொள்கையைப் பன்முகங்களிலும் விரிவுபடுத்துதல், எல்லை கடந்த வர்த்தகம் உள்ளிட்ட வர்த்தகத்தின் புதிய வணிக முறையின் வளர்ச்சிக்கு ஊக்கமளித்தல், வர்த்தகத்தின் அந்நிய செலாவணி தீர்வுக்கான சேவையை மேம்படுத்துதல், இடைப்பட்ட பொருட்கள் வர்த்தகத்தின் வளர்ச்சிப் பணிக்கு நன்கு ஆதரவளித்தல் ஆகியவை உறுதிப்படுத்தப்பட்டன.
மேலும், பிராந்திய திறப்புக்கான ஆதரவில் ஷாங்காய் சர்வதேச நிதி மையத்தின் கட்டுமானம், ஹாய்நான் தாராள வர்த்தக துறைமுகம் உள்ளிட்ட பிரதேசங்களின் அந்நிய செலாவணி நிர்வாக புத்தாக்கம் ஆதிவயற்றுக்கு ஆதரவளிக்குமென அதில் உறுதிப்படுத்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
