ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதினின் அழைப்பை ஏற்று, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அவருடன் தொலைபேசியில் உரையாடினார்.
உக்ரைன் நெருக்கடியின் தற்போதைய நிலைமை மற்றும் ரஷியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான சமீபத்திய தொடர்புகள் குறித்து புதின் பகிர்ந்து கொண்டார்.
அரசியல் வழிமுறையின் மூலம் நெருக்கடியைத் தீர்ப்பதை ஊக்குவிப்பதில் சீனாவின் ஆக்கபூர்வமான பங்கை ரஷியா வெகுவாகப் பாராட்டுகிறது என்று அவர் கூறினார்.
உக்ரைன் நெருக்கடியின் நிலைமை எப்படி மாறினாலும், சீனா தனது நிலைப்பாட்டில் உறுதியாக ஊன்றி நிற்கும் என்றும், அமைதிப் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து ஊக்குவிக்கும் என்றும் ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.