சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலதலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதன் பதட்டம் அடங்குவதற்குள்ளாகவே மதுரையில் மற்றொரு அரசியல் கொலை நடந்தேறியுள்ளது.
இன்று (ஜூலை 16) காலையில், மதுரை வடக்குத் தொகுதி நாம் தமிழர் கட்சி துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன், மர்ம கும்பல் ஒன்றால் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் நாதக கட்சி துணை செயலாளர் பாலசுப்பிரமணியன்.
இவர் இன்று காலை தல்லாகுளம் பகுதியில் உள்ள வல்லபாய் ரோட்டில் சென்றபோது மர்ம கும்பல் ஒன்று அவரை வழிமறித்து தகராறு செய்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக அவரை கூர்மையான ஆயுதங்கள் கொண்டு தாக்கியுள்ளது.
தப்பி ஓட முயற்சித்த பாலசுப்ரமணியனை விடாமல் ஓடஓட விரட்டி கொலை செய்துவிட்டு தப்பியுள்ளது அக்கும்பல்.