உலக அறிவியல் கல்வியறிவு அமைப்பு

2026 உலக அறிவியல் அறிவு மாநாடு ஞாயிற்றுக்கிழமை பெய்ஜிங் மாநகரில் துவங்கியது. இதில் உலக அறிவியல் கல்வியறிவு அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த அமைப்பு கடந்த ஜுன் திங்களில் பெய்ஜிங்கில் பதிவு செய்து நிறுவப்பட்டது. 21 நாடுகளைச் சேர்ந்த 32 நிறுவனங்கள் அதற்கு வித்திட்டன. இந்த அமைப்பு மூலம், அறிவியல் கல்வியறிவுத் துறையில் சீனா உலக நாடுகளுடன் இணைந்து அனுப்பவங்களையும் செயல்பாடுகளையும் அறிவியல் பரவல் வளங்களையும் பகிர்ந்து கொள்ளும்.

கடந்த சில ஆண்டுகளில் அறிவியல் அறிவுக் கட்டுமானத்தை சீனா தொடர்ச்சியாக விரைவுப்படுத்தி வருகின்றது. 2025ஆம் ஆண்டு சீன மக்களிடையில் அறிவியல் அறிவுக் கொண்டவர்களின் விகிதம் 16.47 விழுக்காட்டை எட்டியுள்ளது.

You May Also Like

More From Author