2031 முதல் CBSE 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் இனி 3 மொழிகள் படிக்கவேண்டும்  

Estimated read time 1 min read

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), தேசியக் கல்விக் கொள்கை 2020-ன் (NEP 2020) பரிந்துரைகளைச் செயல்படுத்தும் விதமாக, 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மூன்று மொழிகளை கட்டாயமாக்கத் திட்டமிட்டுள்ளது.
தற்போதைய நடைமுறைப்படி மாணவர்கள் இரண்டு மொழிகளை படித்து வரும் நிலையில், 2031-32 கல்வியாண்டு முதல் மாணவர்கள் மூன்று மொழிகளைக் கற்க வேண்டியது அவசியமாகிறது.
இதில் குறைந்தது இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அதிரடி மாற்றமானது மாணவர்களின் பன்மொழித் திறனை மேம்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்படுகிறது.

You May Also Like

More From Author