பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கூட்டறிக்கை

Estimated read time 0 min read

இந்தியாவின் புது தில்லியில் நடைபெற்ற 18வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில், பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்கள் கூட்டறிக்கை ஒன்றை ஏற்றுக்கொண்டுள்ளனர். இக்கூட்டறிக்கையில், அனைவரையும் உள்ளடக்கிய உலகளாவிய ஆட்சிமுறை, பலதரப்புவாதத்தை வலுப்படுத்தல் ஆகியவை பற்றிய வாக்குறுதி மீண்டும் வலியுறுத்தப்பட்டதோடு, சர்வதேச மற்றும் பிரதேசத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணிக்காக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், உலகப் பொருளாதாரத்தின் தொடரவல்ல மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, கலாச்சாரம் மற்றும் மக்களுக்கிடையிலான ஒத்துழைப்பு ஆகியவற்றை நனவாக்குவது முக்கியமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிரவும், பலதரப்புவாதம் மற்றும் பலதுருவமயமாக்கத்தை வலுப்படுத்தி, சர்வதேச சட்டத்தைப் பேணிக்காக்க வேண்டும் என்றும், புதிதாக வளர்ந்து வரும் சந்தைகள், வளரும் நாடுகள் மற்றும் வளர்ச்சி குறைந்த நாடுகள், உலகளாவிய கொள்கை முடிவுகளின் செயல்முறைகள் மற்றும் கட்டமைப்புகளில் மேலும் விரிவான மற்றும் அர்த்தமுள்ள முறையில் பங்கெடுக்க வேண்டும் என்றும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author