டார்க்கெட்டை தாண்டாத அண்ணாமலை- மிஸ்டு கால் மூலம் உறுப்பினர் சேர்க்கை

Estimated read time 0 min read

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, “வீ த லீடர்ஸ்” என்ற புதிய அமைப்பை தொடங்கி அரசியல் தளத்தில் தனி பாதையை உருவாக்க முயன்று வருகிறார். அமைப்பு தொடங்கிய முதல் நாளிலேயே 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இணைந்தது பெரிய வரவேற்பாக பார்க்கப்பட்டது. ஆனால், அதன் பின்னர் உறுப்பினர் சேர்க்கை எதிர்பார்த்த வேகத்தில் முன்னேறாதது கவனிக்கத்தக்கதாக உள்ளது.

Image

50 லட்சம் உறுப்பினர்கள் இணைந்த பிறகே கட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன் என்று அண்ணாமலை முன்பே தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது இரண்டு மாதங்கள் கடந்தும் சுமார் 20 லட்சம் எண்ணிக்கையையே எட்டாமல் உள்ளது.

அமைப்பில் சேரும் நடைமுறை சற்று சிக்கலாக இருப்பதும் இதற்கான முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. ஆன்லைன் பதிவு, ஓடிபி சரிபார்ப்பு, அடையாள ஆவண விவரங்கள் போன்ற பல கட்டங்கள் இருப்பதால் பொதுமக்கள், குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ளவர்கள் இணைவதில் சிரமம் அனுபவிக்கிறார்கள். இதை சரி செய்ய மாவட்ட அளவில் முகாம்கள் நடத்தப்பட்டாலும் பெரிய மாற்றம் தெரியவில்லை.

இந்நிலையில், மிஸ்டு காலின் மூலம் உறுப்பினர் சேர்க்கையை எளிதாக்கும் புதிய யோசனையில் அண்ணாமலை ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முறையால் படிக்காதவர்களும் எளிதாக இணைக்கப்பட முடியும் என்பதால் உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You May Also Like

More From Author