ஜூலை திங்களுக்கான சீனாவின் இணைய வணிக சரக்குப் போக்குவரத்து குறியீட்டை சீனச் சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவுச் சம்மேளனம் ஆகஸ்ட் 11ஆம் நாள் வெளியிட்டது. இணைய வணிக சரக்குப் போக்குவரத்து வினியோகம் சீராக வளர்ந்து வருகிறது. தொழில் நிறுவனங்களின் சரக்கு சுழற்சி செயல்திறன் திறன் மேலும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஜூலை திங்களில் சீனாவின் இணைய வணிக சரக்குப் போக்குவரத்து குறியீடு 111.2 ஆகும். இது, ஜூன் திங்களில் இருந்ததை விட 0.2 விழுக்காடு புள்ளிகள் குறைந்துள்ளது. சீனாவின் இணைய வணிக சரக்குப் போக்குவரத்து பருவகால ரீதியில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இணைய வணிக சந்தை இயல்பாக இயங்கும் நிலைமைக்குத் திரும்பியுள்ளது. இத்தொழில் துறையின் இயக்கம் அடிப்படையில் நிதானமாக வளர்ந்து வருகிறது. ஜூலை திங்களில், இணைய வணிக சரக்குப் போக்குவரத்து மொத்த அளவும் கிராமப்புறத்தில் இவ்வளவும், கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, 20 விழுக்காட்டிற்கும் மேலாக வளர்ந்து வருகின்றன.
