சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், 10ஆம் நாள், கயானா அரசுத் தலைவர் முகமது இர்ஃபான் அலி அந்நாட்டின் அரசித் தலைவராகத் தொடர்ந்து பதவியேற்றதற்காக வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.
தன்னுடைய வாழ்த்துச் செய்தியில் ஷிச்சின்பிங் கூறுகையில், சீன-கயானா தூதாண்மை உறவு நிறுவப்பட்ட கடந்த 53 ஆண்டுகளில், இரு தரப்புறவு சீராகவும் நிதானமாகவும் வளர்ந்து வருகிறது. பல்வேறு துறைகள் சார்ந்த இருதரப்புகளின் பயனுள்ள ஒத்துழைப்புகள் அதிகமான சாதனைகளைப் படைத்துள்ளதோடு, பல தரப்பு விவகாரங்களில் இரு தரப்பும் நெருக்கமாகத் தொடர்பு கொண்டு வருகின்றன எனக் குறிப்பிட்டார். மேலும், கயானா அரசுத் தலைவருடன் இணைந்து பாடுபட்டு, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தைக் கூட்டாக கட்டியமைக்கும் கட்டுக்கோப்பில், இரு தரப்புகளின் நட்பார்ந்த ஒத்துழைப்பை ஆழமாக்கி, இரு தரப்புறவை தொடர்ந்து புதிய கட்டத்தில் காலடியெடுத்துவைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.