டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான அபிஷேக் போரெல், பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை மற்றும் மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டுகளின் கீழ் ஹூக்ளி மாவட்டம் மகரா காவல் துறையினரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சௌகதா பட்டாச்சார்யா, குற்றம் சாட்டப்பட்டுள்ள அபிஷேக் போரெலை உடனடியாகக் கைது செய்யவும், அவருடைய கைபேசி உள்ளிட்ட அனைத்து மின்னணு சாதனங்களையும் பறிமுதல் செய்யவும் காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.
ஆகஸ்ட் 11 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது, அபிஷேக் போரெல் கைது செய்யப்பட்டு சின்சுரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகக் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் அபிஷேக் போரெல் கைது: கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவால் நடவடிக்கை
