நாட்டின் 80வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, இந்திய விடுதலைக்காக தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) காலை தனது நெஞ்சார்ந்த அஞ்சலியை செலுத்தினார்.
இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தியாகிகளின் வீரமும் அர்ப்பணிப்பும் தான் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர உதவியது எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களின் கனவுகளே 2047க்குள் வளர்ச்சியடைந்த பாரதம் (Viksit Bharat) என்ற இலக்கை அடைய நம்மைத் தொடர்ந்து வழிநடத்துகின்றன என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
140 கோடி மக்களின் கனவு! சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து
